முதல் பெண் தலைமை நீதியாவாரா நாகரத்னா... மேலும் 2 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரை...

2027ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னா நியமிக்கப்பட வாய்ப்பு

முதல் பெண் தலைமை நீதியாவாரா நாகரத்னா... மேலும் 2 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரை...

கொலிஜியத்தின் பரிந்துரைப்படி, 2027 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பி.வி.நாகரத்னா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான 9 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இதில் 6 ஆண் நீதிபதிகள் மற்றும் 3 பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2027 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக, தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் நீதிபதி நாகரத்னா நியமிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. இவரை தவிர ஹிமா கோஹி மற்றும் பெலா திரிவேதி ஆகிய 2 பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பெண் ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.