”ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அறையும் கடைசி ஆணி” -மெகபூபா முப்தி

”ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அறையும் கடைசி ஆணி” -மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் வெளி மாநில வாக்காளர்களையும் பதிவு செய்ய வைப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் எதிர்கால நடவடிக்கையை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு தேசிய மாநாடு தலைவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மெகபூபா முப்தி.

தலைமை தேர்தல் அதிகாரி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் கூறுகையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறியிருந்தார்.  அதன்படி ஜம்மு காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளிமாநில குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவர் என்றும் இதனால் சுமார் 25 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் ஜம்மு காஷ்மீரில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெகபூபா முப்தி கண்டனம்:

வெளி மாநிலங்களில் இருந்து கல்வி அல்லது வியாபார நோக்கத்திற்காக ஜம்மு காஷ்மீருக்கு வந்திருப்பவர்களை இம்மாநில வாக்காளர் பட்டியலில் இணைப்பது கண்டனத்துக்குரியது என மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இதனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு அம்மாநில தேசிய மாநாடு தலைவர் ஃப்ரூக் சாஹிப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளார் மெகபூபா முப்தி.

மேலும் இது போன்ற செயல்பாடுகள் ”ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அறையும் கடைசி ஆணி” என விமர்சித்துள்ளார் மெகபூபா முப்தி.

இதையும் படிக்க: ஜம்மு – காஷ்மீரில் 2023 ஜி-20 உச்சி மாநாடு