உடையும் நிலையில் ஏரி உள்ளதால் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்...

திருப்பதி அருகே உள்ள பழமையான ஏரி, உடையும் நிலையில் உள்ளதால்,  20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

உடையும் நிலையில் ஏரி  உள்ளதால் 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்...

திருப்பதி அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் ராயலசெருவு என்ற பெயரிலான மிக பழமையான ஏரி உள்ளது. கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர் முழுமையாக நிரம்பி உள்ளது.  இந்நிலையில் ஏரியின் ஒரு கரையில் நீர் கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியாகலாம் என்ற அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.

 ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காளஹஸ்தி வரை உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் அதிகாரிகள் ஏரி அருகே உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை  வெளியேற்றுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சொத்து பத்திரங்கள், பணம், நகைகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறுமாறு அந்த கிராமங்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.