வறுமையை ஒழிக்க ஒரே வழி... அசாம் முதலமைச்சரின் ஐடியா...

அசாமில் ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள் என்ற கொள்கையே வறுமையை ஒழிக்க ஒரே வழி என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

வறுமையை ஒழிக்க ஒரே வழி... அசாம் முதலமைச்சரின் ஐடியா...
அசாமில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் அண்மையில் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலைகள் இல்லை என்றும் அரசின் திட்ட உதவிகளும் கிடைக்காது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
 
கடந்த ஒரு மாதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுபான்மை சமுதாய மாணவர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற கொள்கை மட்டுமே வறுமையை ஒழிக்க ஒரே வழி எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணராமல், சிலர் தேவையின்றி பாஜகவின் நடவடிக்கையை விமர்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.