தெலுங்கானாவில் பெருக்கெடுத்த வெள்ளம்...டிராக்டர் மூலம் மக்களை மீட்ட போலீசார்!

தெலுங்கானாவில் பெருக்கெடுத்த வெள்ளம்...டிராக்டர் மூலம் மக்களை மீட்ட போலீசார்!

தெலங்கானாவில் கடந்த சிலநாட்களாக தொடரும் கனமழையால் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

சிர்சில்லா மாவட்டத்தில் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கியவர்களை போலீசார் டிராக்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறிய பெண் ஒருவரை போலீசார் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தேகுமட்லாவில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. குண்டாலா ஆற்றின் பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பசரா மற்றும் தட்வாய் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையும் படிக்க : பாமக போராட்ட எதிரொலி; என்.எல்.சி விரிவாக்கப்பணி தற்காலிக நிறுத்தம்!

அதேபோல், ஹனுமகொண்டா மாவட்டத்தில் கன்னாரம் ஓடையில் பெருக்கெடுத்து சென்ற வெள்ள நீரில் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற நபர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதேபோல் யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடென்ன வாகு திட்டத்தில் இருந்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்லும் காட்சிகள் இணைத்தில் வைரலாகி வருகிறது.