புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

பிட்காயின் இதுவரை இல்லாத அளவாக 66 ஆயிரம் டாலர்களை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. பிட்காயின் என்பது உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர் பணம் ஆகும். இதை கண்களால் காண முடியாது. கணினியில் மட்டுமே பார்க்க முடியும். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது. ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின் பயன்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் பிட்காயின் மதிப்பு அதிரடியாக 66 ஆயிரம் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தை கட்டுபாட்டு வாரியம் பிட்காயின் வர்த்தகத்துக்கு அனுமதி அளித்து இடிஎஃப் தொடங்கிய நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது முதலீட்டாளர்களிடையே கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது.