ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை: குடியரசுத் தலைவர் ராம்நாத்

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை  என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை: குடியரசுத் தலைவர் ராம்நாத்

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை  என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக  உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அயோத்தி ராம் லல்லா கோவிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழிபாடு நடத்தினார். இதன்மூலம் இந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட  ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர், ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை என்றும், ராமர் இருக்கும் இடத்தில் அயோத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சிகளில் மாநில ஆளுனர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.