புனேவில், பயிற்சி விமானம் விழுந்து விபத்து...! பெண் விமானி படுகாயம்...!

மகாராஷ்ட்ரா மாநிலம், புனே மாவட்டத்தில் ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 22 வயதான பெண் விமானி படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனேவில், பயிற்சி விமானம் விழுந்து விபத்து...! பெண் விமானி படுகாயம்...!

புனே மாவட்டத்தில் உள்ள இந்தப்பூர் தாலுக்கா கட்பன்வாடி கிராமத்தில், உள்ள பண்ணையில், நடுவானில் பறந்துகொண்டிருந்த பயிற்சி விமானம், இன்று காலை 11.30 மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் கார்வர் ஏவியேஷனுக்கு சொந்தமானது. இந்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த விமானம் சேதமடைந்து, இதில் பயணித்த விமானி பாவ்னா ராத்தோடு பலத்த காயம் அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.