இந்தியர்கள் 7ம் தேதி முதல் தடையின்றி இந்த நாட்டிற்கு பயணிக்கலாம்!

ஐக்கிய அமீரகத்தை தொடர்ந்து இங்கிலாந்தும் இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கியுள்ளது.

இந்தியர்கள் 7ம் தேதி முதல் தடையின்றி இந்த நாட்டிற்கு பயணிக்கலாம்!

ஐக்கிய அமீரகத்தை தொடர்ந்து இங்கிலாந்தும் இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கியுள்ளது.

அதிக வீரியம் கொண்ட டெல்டா வகை வைரஸ் இந்தியாவில் காணப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து இந்திய பயணிகள் வருகைக்கு தடை விதித்தது. அதுமட்டுமல்லாது அங்கு தொற்று குறைந்து ஊரடங்கு தளர்வு விலக்கப்பட்டபோதிலும்,  இந்தியா தொடர்ந்து சிவப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தியாவை ‘amber’ பட்டியலுக்கு மாற்றி, இந்தியா்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு தளர்த்தியுள்ளது. இதனால் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் 10 நாள் வீட்டில் இருந்தபடியே ஊரடங்கினை கடைபிடித்தால் மட்டும் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு உத்தரவானது வருகிற ஞாயிற்று கிழமை அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு போக்குவரத்து துறை செயலர் தெரிவித்துள்ளார்.