நிருபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரல்

உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி சென்று தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிருபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரல்

உத்தரபிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தொலைக்காட்சி நிருபரை ஓட ஓட விரட்டி சென்று தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நேற்று பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற  நிலையில், உன்னாவ் பகுதியில், உள்ளூர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் அவர்கள் கடத்தப்பட்டதாகவும், அதற்கு  ஐஏஎஸ் அதிகாரி திவ்யான்ஷு பட்டேல் உதவியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை செய்தியாளர் ஒருவர்  பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் நிரூபரின் இந்த செயலை கண்டு ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் பட்டேல், அவரை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார்.இந்தகாட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.,......