நாடு முழுவதும் இன்று விஜயதசமி கோலாகலம்!

நாடு முழுவதும் இன்று விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திாி விழா கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 9 நாட்கள் நடைபெறும் இதன் இறுதிநாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ மற்றும் விஜய தசமி என்ற பெயரில் கொண்டாடுகிறோம். இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும், ஞானம் வேண்டியும் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்வார்கள்.

இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை அணிவித்து, பொாி, அவுல், பொாிகடலை, சுண்டல் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடுவா். மாணவா்கள் தங்கள் புத்தங்களை சரஸ்வதி தேவியின் முன்பு வைத்து வழிபடுவர். பெரும்பாலானோா் கோயிலுக்கு சென்று வழிபடுவா். 

விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி இன்று பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சோ்ப்பா். மேலும் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் அாிசியில் பெயா் எழுதும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும் எனவும், அனைத்து ஆசிாியா்களும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.