பா.ஜ.க.வுக்கு ஒரே மாற்று நாங்கள் தான்... சொன்னது யார் தெரியுமா..?

மத அரசியல் செய்யும் பாஜகவுக்கு ஒரே மாற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தான் என கூறிய மம்தா அதற்கு புதுவித விளக்கம் கொடுத்தது கோவா மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பா.ஜ.க.வுக்கு ஒரே மாற்று நாங்கள் தான்... சொன்னது யார் தெரியுமா..?

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கோவாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக-வை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதையடுத்து அங்கு தீவிர வாக்குச்சேகரிப்பில் மம்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தாவின் பேச்சு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது, மத அரசியல் செய்யும் பாஜகவுக்கு ஒரே மாற்று திரிணாமுல் காங்கிரஸ் தான் என கூறிய அவர், டி. எம்.சி என்றால் கோவில், மசூதி, சர்ச் என்பதே பொருள் என சுட்டிக்காட்டிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து மதத்துக்குமான கட்சி என வலியுறுத்தினார். வாக்குகளைப் பிரிப்பதற்காக தாம் இங்கு வரவில்லை என குறிப்பிட்ட அவர் வாக்குகளை ஒன்றிணைத்து வெற்றி வாகை சூடவே வந்ததாகவும் கூறினார்.