காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மறு சீரமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடவை சந்தித்தது. ஐந்து மாநிலத் தேர்தல்கள் குறித்து கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் தலைமையில் மணீஷ் திவாரி, சல்மான் குர்ஷித், ஜோதிமணி ஆகியோர் உள்ளிட்ட ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இந்த குழு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முதல் கட்ட அறிக்கையை நேற்று அளித்தது. குழுவின் அறிக்கையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் கட்சியை மறு சீரமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் குழுவின் ஆய்வு இன்னும் முடிவடையவில்லை. முடிவடைந்த பின்னர் இறுதி கட்ட ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிகிறது.