ஜம்மு - காஷ்மீருக்கு  மாநில அந்தஸ்து எப்போது..? 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு  மாநில அந்தஸ்து எப்போது..? 

2018 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்றும் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான முடிவுகள் ஏதும் இருக்கிறதா? எனவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அங்கு தேர்தலை நடத்துவது என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.