நாட்டில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் நகரம் எது?

இந்தியாவில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் நகரம் என்ற பெருமையை புவனேஸ்வர் பெற்றுள்ளது.

நாட்டில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் நகரம் எது?

இந்தியாவில் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் நகரம் என்ற பெருமையை புவனேஸ்வர் பெற்றுள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், அனைத்து மக்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநகராட்சி இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்கென ஆரம்ப சுகாதார மையம், சமூக கூடம் உட்பட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 50 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. சுமார் 10 முறை நடத்தப்பட்ட இந்த தடுப்பூசி முகாமில், முதியவர்கள் வசதிக்காக 15 தனி மையங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில் ஜூலை இறுதிக்குள் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, 18 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 9 லட்சம் பேர் இரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும், புலம் பெயர்ந்து பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.