காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல் பிரதமர் மோடியை ஊடகங்கள் விமர்சிக்காதது ஏன்? - ராகுல் கேள்வி

மும்பை தாக்குதலின் போது அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள், அதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தும், பிரதமர் மோடியை ஊடகங்கள் விமர்சிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவர்களுடன் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக உருவாக்கிய கட்டமைப்புகளை ஏழே ஆண்டுகளில் பாஜக விற்றுவிட்டதாக குறை கூறினார். மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் எதுவும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருப்பதாக கூறினார்.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்ததாகவும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.