ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடுவது ஏன் ? ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கேள்வி!

ஞானவாபி விவகாரத்தில் வரலாற்றை மாற்ற முடியாது என்ற போதிலும், ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேடுகிறீர்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத் கேள்வி எழுப்பியுள்ளார் ...

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடுவது ஏன் ? ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கேள்வி!

உத்தரப்பிரதேச மாநிலம் காசி ஞானவாபி மசூதியில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளும், ஒரு காலத்தில் ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாக இருந்ததாக வலதுசாரி இயக்கங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். நாள்தோறும் இதுபோன்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், மசூதிகளில் சிவலிங்கத்தை தேடுவது ஏன் என ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பாகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிந்துக்களுக்கு சில இடங்கள் மீது  தனி வழிபாட்டு உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஞானவாபி பிரச்சனையை தற்போதைய ஹிந்துக்களோ இஸ்லாமியர்களோ உருவாக்கவில்லை எனவும் கூறினார்.