கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்குமா அதிமுக...?

கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்குமா அதிமுக...?

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்வது குறித்து அம்மாநில அதிமுகவினர் தயக்கம் காட்டியுள்ளனர். 

கடந்த சில மாதங்களாகவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் பரவி வருகிறது. ஆனால், சமீபத்தில் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சந்தித்து, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிபடுத்தினார்.

இதையும் படிக்க : ”தாண்டியா ஆட்டமும் ஆட... ” - நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...!

இதற்கிடையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இறுதி நாளில் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தங்கள் வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகத் தேர்தலில் இருந்து ஒருபுறம் அதிமுக வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டாலும், மறுபுறம் இதுவரை கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது குறித்து அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.