இனி பெண்களுக்கு தலைநகரில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது....

டெல்லியில், ஒரு பெண் கேப் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கி அவரை கொள்ளையடிக்க முயற்சி செய்த தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி பெண்களுக்கு தலைநகரில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது....

டெல்லி | தலைநகர் டெல்லியில் சமீப காலங்களில் படு மோசமான தகவல்கள் நிரைந்து வருகிறது. புத்தாண்டு பார்ட்டி முடித்து வீட்டிற்கு திரும்ப முயன்ற அஞ்சலி என்ற பெண்ணின் உடலை சுமார் 13 கி.மீ க்கு இழுத்து சென்ற போதை ஆசாமிகள், ஒரு பெண்ணை காவலர் ஒருவர் காரில் இழுத்துச் சென்ற வீடியோக்கள் என பல வீடியோக்கள் வெளியாகி, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாபு மீது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்நிலையில், தலைநகரில் நடந்த மற்றொரு சம்பவம் பெரும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | பெண்ணை தர தரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர்...

டெல்லியில் பெண் கார் ஓட்டுநரை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கி, இரு மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டனர். இந்தியா கேட் அருகே பிரியங்கா என்பவர் ஊபர் காரை ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது முன் கண்ணாடியை சிலர் உடைத்த நிலையில், வெளியே சென்று பார்த்த பிரியங்காவை பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தொண்டையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், நீண்ட நேரம் போராடி தனியாக மருத்துவமனையில் அவர் அனுமதியானார். ஊபர் பாதுகாப்பு செயலி வேலைசெய்யாததோடு, போலீசாரும் தாமதமாகவே வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தலைநகரில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... நட்பில் கூட பாதுகாப்பு இல்லாத அவலம்...