இந்தித் திணிப்பிற்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்!

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தி இந்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தித் திணிப்பிற்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்!

ஒன்றிய அரசு மற்ற மொழி பேசும் பகுதிகளில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில், சம்பத் உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தி இந்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் இந்தி எதிர்ப்பு போராட்டம்

காரைக்காலில் திமுக இளைஞரணி மாவணவர் அணி சார்பாக இந்தி திணிப்பையும் ஒரே நுழைவு த் தேர்வையும் திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய ஒன்றியத்தின் பெருமை, அதை சிறுமைப்படுத்தி, ஒற்றுமையை சீர்குலைக்க  திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கூறப்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  நாகதியாகராஜன் முன்னிலை வகித்து, ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார்.