சபாநாயகர் பதவி பாஜகவுக்கே.! புதுவை பாஜக அறிவிப்பு.! 

சபாநாயகர் பதவி பாஜகவுக்கே.! புதுவை பாஜக அறிவிப்பு.! 

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 40 நாட்கள் முடிந்த நிலையில் இன்னும் அமைச்சரவை பொறுப்பேற்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் பா ஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே நடைபெற்று வரும் மோதல் தான் என்று கூறப்படுகிறது. 

அமைச்சரவையில் பா ஜக முக்கிய இடங்களை கேட்க அதற்கு ரங்கசாமி மறுத்து வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் சபாநாயகர் பதவியையும் பா ஜகவுக்கு கொடுக்கவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பா. ஜ.க தலைவர் சாமிநாதன் "அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் பா ஜகவின் பணி முடிந்து விட்டது. இனி முதல்வர் ரங்கசாமி தான் அமைச்சரவை அமைக்கும் முடிவை எடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பா ஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ விரைவில் சபாநாயகராக பதவி ஏற்பார்" எனக் கூறினார்.