10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெண்களுக்கு எதிராக கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு நீக்கப்பட்டு முழு மதிப்பெண்...

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெண்களுக்கு எதிராக கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வினாத்தாளிலிருந்து கேள்வி  நீக்கப்பட்டு முழு மதிப்பெண் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பெண்களுக்கு எதிராக கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு நீக்கப்பட்டு முழு மதிப்பெண்...

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலாம் பருவ தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆங்கில பாடத்தேர்வில், பெண்கள் குறித்து அவதூறான கருத்துடன் கூடிய குறிப்பு வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது. அதாவது கணவருக்கு மனைவிகள் கீழ்படியாததே, குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுங்கின்மையாக செயல்பட காரணம் என்றும்,   சமூக பிரச்சினைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம்’ என்பது போல் சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தை மக்களவையில் பேசிய காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி, இதற்கு பொறுப்பேற்று மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் பெண்களை தவறாக சித்தரிக்கும் இத்தகைய கேள்விகளை நீக்குவதுடன், சிபிஎஸ்இ பாடதிட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியறுத்தினார்.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய அக்கேள்வியை மத்திய கல்வி வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் இது வாரியத்தின் வழிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக குறிப்பிட்ட சிபிஎஸ்இ, அக்கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.