கோவாக்சினை ஏற்க மறுக்கும் வெளிநாடுகள் ,..மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட தயாராகும்  பாரத் பயோ டெக் நிறுவனம்.! 

கோவாக்சினை ஏற்க மறுக்கும் வெளிநாடுகள் ,..மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட தயாராகும்  பாரத் பயோ டெக் நிறுவனம்.! 

சீனாவின் உருவானதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிகளே தீர்வு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி உற்பத்தி செய்வது தீவிரம் காட்டின. 

இந்த தடுப்பூசி போட்டியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசியும் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் தடுப்பூசியும் இரண்டாம் கட்ட சோதனையை கடந்து வெற்றிகரமாக மூன்றாம் கட்ட சோதனையையும் கடந்து வெளிவந்தது. அதன்பின் அமெரிக்க, சீன தடுப்பூசிகளை மூன்றாம் கட்ட சோதனையை கடந்து வெளிவந்தது.

அதில் ஆக்ஸ்போர்டு தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் வெளியாக, பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி கோவாக்சின் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வே வெளிவராத நிலையில் அதை மக்களுக்கு செலுத்துவது சரியா என்ற சர்ச்சை அப்போதே எழுந்தது. 


மூன்றாம் கட்ட ஆய்வு முடிவு வெளியாகாத காரணத்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோவாக்சினை அங்கீகரிக்காமல் இருந்தது. அதோடு கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்கமுடியாது என்றும் கூறியது.  இதன் காரணமாக கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டிய நிர்பந்தம்  பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. 
 

இந்நிலையில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இணை இயக்குனர் மற்றும் கூட்டு நிர்வாக இயக்குநர் சுசித்ரா, டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'கோவாக்சினின் பாதுகாப்பும், திறனும் வெளிப்படையானவை. இது பற்றி இதுவரையில் 9 ஆராய்ச்சி ஆய்வுகளை வெளியிடப்பட்டு உள்ளது. கோவாக்சின் 2 கட்ட பரிசோதனைகள் முடித்துள்ளது. 3ம் கட்ட பரிசோதனைகள் ஒழுங்குமுறை அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், கோசாக்சின் மருந்துதான் டெல்டா, ஆல்பா உருமாற்ற வைரசுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது" என்று கூறியுள்ளார்.