டூர் போறீங்களா? அப்போ நீங்கதான் 3-வது அலை பரவ காரணம்!

மலை பிரதேசங்கள் நோக்கி படையெடுக்கும் சுற்றுலாவாசிகள், 3வது அலை பரவலுக்கு காரணமாகலாம் என சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டூர் போறீங்களா? அப்போ நீங்கதான் 3-வது அலை பரவ காரணம்!

மலை பிரதேசங்கள் நோக்கி படையெடுக்கும் சுற்றுலாவாசிகள், 3வது அலை பரவலுக்கு காரணமாகலாம் என சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா 2-வது அலை முழுவதுமாக முடிவுக்கு வராத நிலையில், தொற்று கட்டுக்குள் வந்திருப்பதை காரணம் காட்டி ஒவ்வொரு மாநிலங்களும் சுற்றுலா பயணிகளுக்கு தங்களது வாசல்களை திறந்துள்ளன. இதனால் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக பலரும் மலை பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர்.

இந்த திடீர் கூட்டத்தால் தொற்று மேலும் பரவலாம் என எச்சரிக்கும் கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் கே சரின், அவர்கள் சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாறலாம் என்றும், இதனால் மோசமான சூழலை இந்தியா எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளார்.