முர்முவின் வெற்றி உறுதியாகிவிட்டது?

முர்முவின் வெற்றி உறுதியாகிவிட்டது?

இந்தியாவின் 16வது குடியரசு தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி நிலவுகிறது.  இருந்தபோதிலும்  முர்முவுக்கு ஆதரவை அறிவித்த கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கிடும் போது வெற்றி யாருக்கு என்பது உறுதியானதாகவே இருக்கிறது.

இதைக் குறித்து சில தகவல்கள் இங்கே:

1.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாள் தேர்தலுடன் தொடங்குகிறது. 64 வயதான திரௌபதி முர்மு, நாட்டின் உயரிய பதவிக்கு வலுவான போட்டியாளராக இருக்கிறார்.  2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குடியரசு தலைவராகத் தெர்ந்தெடுக்கப்பட்ட பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராவார்.

2.  ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணும் ஜார்கண்ட் முன்னாள் ஆளுநருமான முர்மு  ஜார்கண்டின் ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவை மட்டுமல்லாமல் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஆதரவையும் பெற்றுள்ளது ஒரு கணக்கிடப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

3.  பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முர்முவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.  பாஜகவின் கூட்டணி கட்சியுடன் இருப்பவராவார்.

4. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது

5.   ஐக்கிய முற்போக்கு கூட்டணி  வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதலில் ஆதரித்த தாக்கரே அணி, 16 எம்.பி.க்கள் உத்தவ் தாக்கரேவை சந்தித்து  முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததை அடுத்து முடிவை மாற்றியுள்ளனர்.

6.  அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில்  மத்திய முன்னாள் அமைச்சராக இருந்த  சின்ஹா, தற்போது திரிணாமுல் காங்கிரஸில் உள்ளார்.   முன்மொழியப்பட்ட மூன்று  வேட்பாளர்கள் மறுப்பு கூறியதையடுத்து  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சின்ஹாவை குடியரசு வேட்பாளராக முன்னிலைப்படுத்தியது.

8.  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோர் பல்வேறு காரணங்களை கூறி குடியரசு வேட்பாளராக மறுத்துவிட்டனர். 

9.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களால் குடியரசு தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

10.  வாக்கெடுப்புக்கு எந்தக் கட்சியின் கொறடாவும் ஆணை பிறப்பிக்க முடியாது.  மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் அறிவித்த கால அட்டவணையின்படி ஜூலை 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.