ஒருவழியாக முடிவுக்கு வந்த புதுவை அரசியல் குழப்பம்,..ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியலை வழங்கினார் ரங்கசாமி.! 

ஒருவழியாக முடிவுக்கு வந்த புதுவை அரசியல் குழப்பம்,..ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியலை வழங்கினார் ரங்கசாமி.! 

புதுவையின் அமைச்சர்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பாஜக, அதிமுக, மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், பாஜக ஆறு இடங்களிலும், என் ஆர் காங்கிரஸ் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம். எல்.ஏ,கள் மற்றும் நியமன எம். எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அதன்பின் பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. இதில் பாஜகவுக்கு  2 அமைச்சர்கள் என்றும் என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள் என 5 பேர் கொண்ட பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.