கொரோனா நிவாரண நிதியாக 3 ஆயிரம் அறிவிப்பு.! ஆளுநரும் ஒப்புதல்.! 

கொரோனா நிவாரண நிதியாக 3 ஆயிரம் அறிவிப்பு.! ஆளுநரும் ஒப்புதல்.! 

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்றது.அதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ரங்கசாமி அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பின் படி கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்கப்படும்  என்றும்  இதன் மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அரசின் இந்த திட்டத்துக்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் ஒப்புதல் அளித்துள்ளார்.