சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு...உத்தவ் தாக்கரேவுக்கான நெருக்கடியா?

சஞ்சய் ராவத் எட்டு நாட்கள் அமலாக்கத் துறை காவலில் இருந்தார்.

சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு...உத்தவ் தாக்கரேவுக்கான நெருக்கடியா?

மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதியில் மறுமேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் நாள் சஞ்சை ராவத்தை அமலாக்கத் துறை கைது செய்தது.

சிவசேனாவின் மூத்த தலைவர்

சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர். இவர் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மிக நெருங்கிய நண்பர். சிவசேனாவின் பெரும்பான்மை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவிடம் சென்றாலும், சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவை தான் உறுதியாக ஆதரிக்கிறார். அதனால் தான் பாஜகவால் அதிகம் குறிவைக்கப்படுகிறார் எனக் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கு

பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5 வரை பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதியில் மறுமேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை ஆகஸ்ட் 1 அன்று ராவத்தை கைது செய்தது.

ராவத் எட்டு நாட்கள் அமலாக்கத் துறை காவலில் இருந்தார். ஆகஸ்ட் 8 ஆம் நாள் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவரது காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்று அமலாக்கத் துறை சமர்ப்பித்தது.

கண்டிவலியில் உள்ள பத்ரா சாலின் மறுவடிவமைப்புத் திட்டம் தொடர்பான மோசடி குற்றச்சாட்டின் பேரில் ராவத் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை ஆரம்பத்தில் ரூ.1.06 கோடியை ராவத்தின் குடும்பத்தினர் ‘நேரடி பயனாளிகளாக’ பெற்றதாகக் கூறியது. பின்னர் புதிதாக மேலும் 2.25 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியது. இந்த குற்றச்சாட்டுகளை ராவத் மறுத்துள்ளார். அமலாக்கத் துறை தனது அலுவலகத்தில் ராவுத்தின் மனைவி வர்ஷாவையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தது.