மத்திய அரசிடன் விளக்கம் கோரிய ஸ்விக்கி, சோமாட்டோ..!!

ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஸ்விக்கி, சோமாட்டோ நிறுவனங்கள் மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளன.

மத்திய அரசிடன் விளக்கம் கோரிய ஸ்விக்கி, சோமாட்டோ..!!

லக்னோவில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதன் மூலம் நுகர்வோருக்கு விலை அதிகரிக்காது என்றும் உணவகங்களில் வசூலிக்கப்படும் வரி இனி ஆன்லைன் டெலிவரியின் போது வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், முன்னணி உணவு சேவை நிறுவனங்களான ஸ்விக்கி, சோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி எவ்வாறு விதிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளன.

இது அடுக்கு வரி விதிப்புக்கு வழிவகுக்குமா என்று சந்தேகம் எழுப்பியுள்ள நிறுவனங்கள் நுகர்வோரின் கைகளில் பொருள் சென்று சேரும்போது, அடக்க விலை அதிகரிக்கக் கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.