தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பிரச்சாரத்தில் இறங்கிய சந்திரசேகர ராவ்!

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே பிரச்சாரத்தில் இறங்கிய சந்திரசேகர ராவ்!

தெலுங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர் ராவின் பொதுக்கூட்டம் மீது அனைவரது பார்வையும் உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே கட்சியின் பிரச்சாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்குவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் பிரச்சாரம்

டுப்பாக் மற்றும் ஹுசூராபாத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் தவிர்த்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹுசூர்நகர் மற்றும் நாகார்ஜுனாசாகர் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால், முனுகோடு இடைத்தேர்தலில், தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே, முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், தெலங்கானாவின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீதான குறைகளைக் கூறி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய சந்திரசேகர் ராவ் இந்தப் பொதுக்கூட்டத்தை பயன்படுத்தவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மின் துறையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு

ஆகஸ்ட் 19 முதல் தெலுங்கானா மின்சாரம் வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதித்தது, தெலுங்கானா மீண்டும் மின்வெட்டை எதிர்கொள்ளும் என்ற அச்சத்தை தூண்டுகிறது. மின்சாரத் துறை கட்டுப்பாடுகள் மீதான மையத்தின் கட்டுப்பாடுகள் குறித்து சந்திரசேகர் ராவ் இன்னும் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை, மேலும் தெலுங்கானாவை மீண்டும் இருளில் தள்ளுவதற்காக பாஜக மற்றும் மோடியை குறிவைக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், விவசாயத்திற்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம், அனைத்துத் துறைகளுக்கும் 24 ம  ணி நேரமும் தரமான மின்சாரம் போன்ற நலத் திட்டங்களை இழக்க நேரிடும் என்று சந்திரசேகர ராவ் முனுகோடு தொகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 'இலவசங்கள்' என்று கூறி அவற்றை ரத்து செய்ய பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.

கட்சி நிர்வாகிகள் கோரிக்கை

இடைத்தேர்தலுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர்கள், முனுகோடு வளர்ச்சிக்கான நீண்ட பட்டியலைச் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர். மேலும், கிராமங்களில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

தொகுதியின் தலைமையகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பகுதி மருத்துவமனை ஆகியவை குறித்து முதலமைச்ச்ர் அறிவிக்க வேண்டும். பாலங்கள் மற்றும் மதகுகள் கட்டுவது தொடர்பான நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பன அப்பட்டியலில் உள்ளது.