பிரம்மோஸ் ஏவுகணை விவகாரம்… விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்!

பிரம்மோஸ் ஏவுகணை விவகாரம்… விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்!

ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஒரு பிரம்மோஸ் ஏவுகணை தற்செயலாக மார்ச் 9, 2022 அன்று ஏவப்பட்டது. இவ்வழக்கின் உண்மைகளை கண்டறிய அமைக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றம், சம்பவத்திற்கான பொறுப்பை நிர்ணயிப்பது உட்பட, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் இருந்து மூன்று அதிகாரிகள் விலகி இருப்பதைக் கண்டறிந்தது. அதிகாரிகள் தற்செயலாக ஏவுகணையை ஏவ வழிவகுத்தனர். இந்த சம்பவத்திற்கு இந்த மூன்று அதிகாரிகளும் முதன்மையாக பொறுப்பேற்றனர்.

 பிரம்மோஸ் ஏவுகணை தற்செயலாக விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்டு பாகிஸ்தானுக்குள் மியான் சன்னு என்ற இடத்தில் தரையிறங்கியது.  இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே, இந்தியாவினால் விசாரணை தொடங்கப்பட்டது.பாகிஸ்தான் எல்லைக்குள் தற்செயலாக ஏவுகணை ஏவப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மார்ச் 15 அன்று தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணையின் முடிவில் குரூப் கேப்டன், விங் கமாண்டர் நிலையிலுள்ள இருவர் என மூன்று அதிகாரிகளை இந்திய விமானப் படை இன்று பணி நீக்கம் செய்துள்ளது.