பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ஒதுக்கப்பட்டாரா இளநிலை அமைச்சர்?

பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ஒதுக்கப்பட்டாரா இளநிலை அமைச்சர்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இளநிலை அமைச்சர் தினேஷ் காதிக் எழுதியதாகக் கூறப்படும் 'ராஜினாமா கடிதம்' வைரலாகியுள்ளது .

ராஜினாமா கடிதம்:

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குப் பிறகு,  சிறிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒருபட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தனது ஜல் சக்தி துறை அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதைக் காரணம் காட்டி கடிதத்தில் ராஜினாமா செய்ய விரும்புவதாக காதிக் கூறியுள்ளார் . தனது அமைச்சரவையின் அமைச்சரால் அவருக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் காரணம் காட்டியுள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்திரா  தியோ சிங் ஜல் சக்தி துறையின் அமைச்சராக உள்ளார்.  ஹஸ்தினாபூரின் உள்ளூர் நிர்வாகம், காதிக் எம்.எல்.ஏ.வாக இருந்தும், அவருடைய புகாருக்கு செவிசாய்க்கவில்லை என்று கடந்த மாதம் செய்திகளில் கூறியிருந்த காதிக், அமித் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்,. ஆனால் பொதுவாக அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஆளுநர், முதலமைச்சர் அல்லது மாநில கட்சி தலைவரிடமே வழங்குவது முறையாகும்.

எதிக்கட்சிகள் கண்டனம்:

ஒரு பாரபட்சமான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து ராஜினாமா செய்வது மரியாதை இல்லை;ஆனால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஆக இருப்பதால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் ராஜினாமா செய்வது நியாயமானது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.  பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சருக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.

ஜல் சக்தி துறையின் அமைச்சர் ஸ்வதந்திரா தியோ சிங்  பதில்:

ஜல் சக்தி துறையில் தனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை என்று காதிக் கூறியது சுதந்திர தியோ சிங்கை சிக்கலில் தள்ளியுள்ளது. காதிக்-ன் கடிதம் வைரலான பிறகு, சிங் அவருடைய இளநிலை அமைச்சருடன் தினமும் பேசுவதாகவும், அவர் திருப்தியடையவில்லை என்றும் கூறினார். சிக்கல்கள் இருந்தால், அது அவருடனான சந்திப்பிற்குப் பிறகு தீர்க்கப்படும் என்று சிங் கூறியுள்ளார்.