கோபா அமெரிக்கா கோப்பை.. இறுதி ஆட்டத்தில் மோதும் அர்ஜென்டினா  பிரேசில் அணிகள்.! 

கோபா அமெரிக்கா கோப்பை.. இறுதி ஆட்டத்தில் மோதும் அர்ஜென்டினா  பிரேசில் அணிகள்.! 

கோபா அமெரிக்கா கோப்பைக்கான இறுதி போட்டியில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதிபெற்றுள்ளது.அரை இறுதி போட்டியில் கொல்ம்பிய அணியை பெனால்டி முறையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பிரேசிலில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணியை கொல்ம்பிய அணி எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு கோலை அடித்து அர்ஜென்டினா அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

அர்ஜென்டினாவின் இந்த ஆதிக்கத்தை இரண்டாவது பாதியில் கொலம்பிய அணியினர் முறியடித்தனர். அவர்கள் ஒரு கோல் அடித்து சமன் செய்ததால் ஆட்டத்தில் அனல்பறந்தது. அர்ஜென்டினா அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை வீரர்கள் கோலாக்க தவறினார். இறுதி வரை இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்து இருந்ததால் பெனால்டிமுறை கடைபிடிக்கப்பட்டது.இதில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் மற்றொரு தென் அமெரிக்க ஜாம்பவான் ஆன பிரேசில் அணியை அர்ஜென்டினா அணி எதிர் கொள்கிறது.