மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா மீது அவதூறு வழக்கு: சம்மன் அனுப்பியது நீதிமன்றம் ....!

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட  பஜ்ரங் புனியா மீது  அவதூறு வழக்கு:  சம்மன் அனுப்பியது  நீதிமன்றம் ....!

ஒலிம்பிக் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அளித்த ஒரு பேட்டியில் மல்யுத்த பயிற்சியாளர் நரேஷ் தஹியாவை பஜ்ரங் புனியா அவதூறாகப் பேசியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக செப்டம்பர் 6ம் தேதி நேரில் ஆஜராக பஜ்ரங் புனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரர் நரேஷ், ஏற்கனவே  பாலியல் வன்கொடுமை வழக்கில் நரேஷ் தாஹியா கைதாகி விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | "பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை" அண்ணாமலை பெருமிதம்!!