இந்தியாவின் வேகத்தில் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து  

இந்தியாவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

இந்தியாவின் வேகத்தில் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து   

இந்தியாவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து  இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4 விக்கெட்களையும், ராபின்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோரை பும்ரா விரைவில் வெளியேற்றினார். இதனையடுத்து இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.  இதில் டெவிட் மலான் மற்றும் கிரேக் ஓவர்டன் விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் வீழ்தினார். இங்கிலாந்து தற்போது 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் போப் மற்றும் பேர்ஸ்டோவ் நிதானமாக விளையாடி வருகின்றனர்.