பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்.. ரபேல் நடால், காஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் ரபேல் நடால் மற்றும் காஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்.. ரபேல் நடால், காஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

இதனைத்தொடர்ந்து முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். மேலும் விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரூட் 2,3 மற்றும் 4-வது செட்டை கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனிடையே நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.