பஞ்சாபில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர்: மரியாதை செய்து வரவேற்ற ஊர் மக்கள்..!

பஞ்சாபில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர்: மரியாதை செய்து வரவேற்ற ஊர் மக்கள்..!

இந்திய அளவில் பஞ்சாபில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற உத்திரமேரூர் விளையாட்டு வீரருக்கு சிலம்பம் ஆடி வரவேற்பு கொடுத்த சக வீரர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கப்பல் வெங்கடேசன் என்பவரது மகன் சரத் ராஜ் வயது 20. இவர் கிக் பாக்சிங் மற்றும் சிலம்பம் போட்டியில் இந்திய  அளவில் விளையாடி பல்வேறு தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.

இவர், பஞ்சாப் மாநிலத்தில் செகந்தர் லவ்லி பல்கலைக்கழகத்தில் இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கமும், கிக் பாக்சிங் போட்டியில் ஒரு தங்கம், ஒரு சில்வர் பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில் உத்திரமேரூர் வருகை புரிந்த விளையாட்டு வீரர் சரத்து ராஜுக்கு உத்திரமேரூர் பகுதி சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் சுற்றி சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் அவருக்கு வியாபாரிகள், வர்த்தகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அங்கு நடந்த போட்டியில் நெல்வாய் கூட்ரோட்டத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற வீராங்கனை தங்கப்பதக்கமும், ஸ்ரீமதி என்ற மாணவி வெங்கல பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க     | கீழடியில் தங்க கம்பி, காளை பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு...!