டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகையை அறிவித்தது ஐசிசி...

டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகையை அறிவித்தது  ஐசிசி...

டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய் அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கும் பரிசுத்தொகையாக ரூ. 12 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகையும் அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ. 42 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.