இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!  

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!   

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தில், தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் 25 ரன்களிலும், கே.எல்.ராகுல் 84 ரன்களிலும் அவுட் ஆகினர். ரவீந்திர ஜடேஜா 56 ரன்கள், ஷமி 13 ரன்கள், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 28 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 278 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி களமிறங்கினர். இருவரும் ஆட்டமிழக்காமல், தலா 11 மற்றும் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று நடைபெறும் நான்காவது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்தை சொற்ப ரன்களில் வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் முனைப்புடன் உள்ளனர்.