ஜிம்பாப்வே VS இந்தியா: அசத்தல் வெற்றி பெற்றது யார்?

ஜிம்பாப்வே VS இந்தியா: அசத்தல் வெற்றி பெற்றது யார்?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

ஜிம்பாப்வே VS இந்தியா:

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி, ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே வீரர்கள், இந்திய அணியின் ஆக்ரோஷ பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 40 புள்ளி 3 ஓவர்களில், அந்த அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியா வெற்றி:

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், சுப்மன் கில் இருவரும் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல், நிலைத்து நின்று ஆடினர். இறுதியில், 30 புள்ளி 5 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 192 ரன்களை எட்டிய இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் 82 ரன்களும், தவான் 81 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் எனும் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.