ஸ்டூவர்ட் பிராட்டின் ஓய்வை, தாங்க முடியாமல் அழுத ஆண்டர்சன்... பிரிகிறது சாதனை ஜோடி!!

ஸ்டூவர்ட் பிராட்டின் ஓய்வை, தாங்க முடியாமல் அழுத ஆண்டர்சன்... பிரிகிறது சாதனை ஜோடி!!

கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட், ஆசஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் 37 வயதான ஸ்டூவர்ட் பிராட். ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

ஸ்டுவர்ட்டின் பந்துவீச்சு கூட்டாளியான ஜேம்ஸ் ஆண்டர்சனின், 41வது பிறந்தநாளான நேற்று, தனது ஓய்வை அறிவித்திருக்கிறார் ஸ்டூவர்ட் பிராட். தன்னுடைய ஸ்விங் வேகப்பந்து வீச்சால், முன்னணி பேட்ஸ்மேன்களையும் தடுமாற விட்டிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் இணைந்து விளையாடி, இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ட்னெர்ஷிப் அமைத்து, மொத்தமாக 1037 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள். கிரிக்கெட் உலகில் யாராலும் உடைக்க முடியாத சாதனையாக அமைந்துள்ளது.