கொரிய பேட்மிண்டன்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா ..!

கொரிய பேட்மிண்டன்;  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது  இந்தியா ..!

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் ராய்ராஜ், சிராக் ஷெட்டி இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

தென்கொரியாவின் யோசு நகரில்   நடைபெற்ற கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில்,  இந்தியாவின் சாத்விக் ராய்ராஜ், சிராக் ஷெட்டி இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றியது.  

ஜின்னாம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த  40 நிமிட இறுதி ஆட்டத்தில்,  ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை ஜோடியான   இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை,    சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை எதிர்கொண்டது. அதில், உலகின் இரண்டாம் நிலை சீன ஜோடியாக இருக்கும்  ’லியாங் வெய் கெங்’ மற்றும் ’வாங் சாங்’ ஜோடியை  ஆட்டத்தில் வென்றனர்.

 உலகின் மூன்றாம் நிலை இந்திய ஜோடி  21-15, 24-22 என்ற கணக்கில் 2-ம் நிலை சீனர்களை வீழ்த்தியது.  முந்தைய இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து சீன ஜோடிக்கு எதிராக சாத்விக் மற்றும் சிராக் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இதையும் படிக்க    | ”சூரிய, காற்று சக்தி மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி” பிரதமர் பெருமிதம் !

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் இணை  21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.