வெள்ளி வென்றார் மீராபாய் சானு...! கொண்டாட்டத்தில் இந்தியர்கள்...

வெள்ளி வென்றார் மீராபாய் சானு...! கொண்டாட்டத்தில் இந்தியர்கள்...

உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது.

இதில், 200 கிலோ எடையை தூக்கி, சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி இந்தியாவின் மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். இப்போட்டியில், 206 கிலோ எடையைத் தூக்கி சீனாவின் ஜியாங் ஹுய்ஹுவா, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு பெற்ற இரண்டாவது பதக்கம் இது என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க | தங்கப் பதக்கத்துடன் சாய்கோம் மீராபாய்: