” நான் பதவியேற்ற பிறகு விளையாட்டு துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்”- அமைச்சர் உதயநிதி பெருமிதம் ..!

” நான் பதவியேற்ற பிறகு விளையாட்டு துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்”- அமைச்சர் உதயநிதி பெருமிதம் ..!

தான் பதவியேற்ற 6 மாதங்களில் விளையாட்டு துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கால்பந்தாட்ட விளையாட்டினை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

32 அணிகள் மோதும் இந்த விளையாட்டில் 16 மகளிர் அணியும், 16 ஆடவருக்கான அணிகளும் பிரிக்கப்பட்டிருக்கிறது.  மொத்தம் 350 வீரர்கள் களமிறங்கி கால்பந்தாட்டம் விளையாட இருக்கிறார்கள்.  இன்று அதற்கான துவக்க விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று கால்பந்தாட்டத்தினை துவங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் உரையாற்றியபோது:- 

” தமிழ்நாடு மகளிர் காலபந்தாட்டத்தில்  சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர், அவர்களுக்கு பரிசு தொகையாக 60 லட்ச ரூபாய் அறிவித்து அதனை முதல்வர் வழங்க உள்ளார்.  எனக்கும் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணிக்கும் ஒரே நாள்தான் பிறந்தநாள்; என் பிறந்தநாள் அன்று தான் இந்த அணி அறிவிக்கப்பட்டது.  இன்றைக்கு இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றனர். புது அணியாக இருந்தாலும் கழகத்திலேயே  மிகவும் வசதியான செழிப்பான அணியாக விளையாட்டு மேம்பாட்டு அணி திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

எவ்வளவு பெரிய வசதி அணியாக இருந்தாலும் நிகழ்ச்சியில் ஒரு கூரை போட்டு இருந்திருக்கலாம் என நகைச்சுவையான பேச்சு. அல்லது மாலையிலாவது நிகழ்ச்சியை வைத்திருந்திருக்கலாம் மாலையில் வைத்திருந்தால் மின்சார அதிகமாக வந்துவிடும் என்று இப்படி நடத்திருக்கிறார்கள்..

நான் விளையாட்டு துறைக்கு அமைச்சராகி ஆறு மாதங்கள் ஆகிறது,  எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம் என்னுடைய முதல் கையொப்பமே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு தான்,  நான் பதவியேற்ற பிறகு விளையாட்டு துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் மேலும் திமுக கழகத்துடன் இணைந்து விளையாட்டு அணியோடு பணிகளை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது”,  எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க     | சூளகிரி: தட்பவெப்ப நிலை காரணமாக தக்காளி செடிகள் நாசம்,. விவசாயிகள் வேதனை..!