சூளகிரி: தட்பவெப்ப நிலை காரணமாக தக்காளி செடிகள் நாசம்,. விவசாயிகள் வேதனை..!

சூளகிரி:  தட்பவெப்ப நிலை காரணமாக  தக்காளி செடிகள் நாசம்,.  விவசாயிகள் வேதனை..!

சூளகிரியில் தட்பவெப்ப நிலை காரணமாக விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் நாசம்: தக்காளி வரத்து, உற்பத்தி குறைவு காரணமாக விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலத்தில் புதினா,கொத்தமல்லி, தக்காளி,முட்டைகோஸ் என அதிகளவில் பயிரிடப்படுகிறது . ..சூளகிரி வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்து 2 மாதங்களுக்கு முன்பு சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக செடியிலே கால்நடைகளுக்கு உணவாக்கப்பட்டது.

இந்தநிலையில் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தட்பவெப்ப நிலை காரணமாக விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்:.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் சரிவடைந்துள்ளது. தற்போது தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை உயர்வு அடைந்துள்ளது.இந்த நிலையில் விவசாயிகள் ஆர்வமாக தக்காளி செடிகளை பயிரிட்டிருந்தனர்.

ஆனால் தட்பவெப்ப நிலை காரணமாக செடிகளில் தக்காளி உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. எனவும் , இதனால் 1 ஏக்கர் நிலத்தில் 1 இலட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் தங்களது கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது தக்காளி அறுவடையில் நல்ல இலாபம் கிடைத்து வரும் நிலையில் , தட்பவெப்ப நிலை காரணமாக விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி உற்றப்பத்தி குறைவு காரணமாக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என விவசாயிகள் தங்களது கவலையை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க   | "அதிகாரம் என்னிடம் வரும்போது பேனா சிலையை உடைப்பேன்" சீமான் எச்சரிக்கை!