ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு - தமிழ்நாடு அரசு.

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு - தமிழ்நாடு அரசு.

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

அப்போது ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 14க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையும் படிக்க    | தனியார் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து...பெற்றோர் முற்றுகை!!