தொடரும் சூதாட்ட அடிமைகளின் இழப்புகள் ..! என்னதான் தீர்வு..? 

தொடரும் சூதாட்ட அடிமைகளின் இழப்புகள் ..! என்னதான் தீர்வு..? 

சங்கரன்கோவில்  அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மாரிச்செல்வம் டிப்ளமோ பட்டதாரியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இளைஞர் மாரி செல்வம் கடந்த வருடங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது அதன் காரணமாக பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும் தெரிகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட கடனான 3 லட்ச ரூபாயை அவர்களது குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.

 மேலும் இவருக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேலாக கடன் இருந்ததாக  அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் அதனால் கடன் தொல்லை அதிகரித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாறிசெல்வம் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் அருந்தியுள்ளார்.

 இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். விஷம் அருந்திய மாரிசெல்வத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார்.  

ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் இழந்து கடன் அதிகரித்ததால் மனவிரக்தியில் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்ட மூலம் ஏற்பட்ட கடன் தொல்லையால் மனவிரத்தியில் தற்கொலை செய்து கொண்ட  மாரி செல்வத்தின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிக்க     | அரசு பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ, பயில விண்ணப்பிக்கலாம்!