டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ...

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோஹைன் அரையிறுதிக்கு தகுதி பெற்று, இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் 69 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் லோவ்லினா பார்கோஹைன், சீனத் தைபேவின் சென் நயின் சின்னை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடிய லோவ்லினா, 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

மகளிர் ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தனது 4ஆவது லீக் போட்டியில், அயர்லாந்து அணியுடன் மோதியது. 3 கால்பகுதிகளிலும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் இரு அணி வீராங்கனைகளும் போராடினர். கடைசி கால்பகுதியில் ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்தியாவின் நவ்தீப் கவுர் அசத்தலாக கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும், மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி, நடப்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் 680 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த கொரியாவின் ஆன் சானை எதிர்த்து களம் கண்டார். இந்தில் தோல்வியைத் தழுவிய தீபிகா குமாரி, அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார்.

தடகளத்தை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் டூட்டி சந்த் 7ஆவது இடம்பிடித்து, அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தவற விட்டார். அதேபோல், ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் 7ஆவது இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார். ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் எம்.பி.ஜபிரும் 7ஆவது இடமே பிடித்து தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீரங்கனை யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.