என்னையா பண்றிங்க?.. பிட்சில் டேவிட் வார்னருடன் ரொமான்ஸ் செய்யும் அந்த வீரர் யார்? வைரல் போஸ்!!

டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் செய்த சேட்டை வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

என்னையா பண்றிங்க?.. பிட்சில் டேவிட் வார்னருடன் ரொமான்ஸ் செய்யும் அந்த வீரர் யார்? வைரல் போஸ்!!

பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 2 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் 3வது போட்டி லாகூரில் நடந்து வருகிறது.

இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர்களை விட.. டேவிட் வார்னர் செய்யும் லூட்டியை காண பெரும் ரசிகர் பட்டாளமே வந்துக்கொண்டிருக்கிறது.. எப்போது டிக்டாக்கில் தனது நகைச்சுவை திறமையை காட்டி வந்த டேவிட் வார்னர்.. தற்போது விளையாட்டு மைதானத்திலும் தனது நடன, பாட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் எப்போது நகைச்சுவை காட்டி வந்த வார்னர்..ஒருபடி மேல் சென்று ரொமான்ச்சில் களமிறங்கியுள்ளார். ஆட்டத்தின் 3வது நாளான நேற்று, அன்றைய நாளின் கடைசி பந்தை சாஹீ அஃப்ரிடி வீசினார். அதை வார்னரால் சமாளிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்ட்ரைக்கர் முடிவில் இருந்த உஸ்மான் கவாஜாவை சிங்கிள் ரன் எடுக்க வேண்டாம் என்று ஆக்ரோஷமாக கத்தினார்.

இதை பார்த்த சாஹீ அஃப்ரிடி.. வார்னரின் அருகே சென்று அவரையே முறைத்து பார்த்தார். உயரம் குறைவாக இருந்த இருந்த வார்னர், டஃப் கொடுக்கணும் என்ற எண்ணத்தில் அஃப்ரிடி பக்கத்தில் நெருங்கி சென்று மேல் நோக்கி முறைத்து பார்த்தார். இருவரும் சில நொடிகள் மிக அருகில் நின்று பிறகு சிரித்துக்கொண்டே சென்றனர். இருப்பினும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை எடிட் செய்து இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

போட்டியின் போது இவர்கள் இருவரும் செய்யும் லூட்டி, செல்ஃபிகள், பாகிஸ்தான் பரபரப்புகளை மறக்கடித்து, விளையாட்டால் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.