கோபா அமெரிக்கா போட்டி.. பெருவை வீழ்த்தி 3ம் இடம் பிடித்த கொலம்பியா.! 

கோபா அமெரிக்கா போட்டி.. பெருவை வீழ்த்தி 3ம் இடம் பிடித்த கொலம்பியா.! 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணியை வீழ்த்தி, கொலம்பியா அணி 3-வது இடத்தை பிடித்து வாகை சூடியுள்ளது.

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் அணிகள் முன்னேறிய நிலையில், 3-வது இடத்தை பிடிப்பது யார்? என கொலம்பியா மற்றும் பெரு அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற்றது. 

இதில் இரு அணிகளும் சரிசமமாக மல்லுக்கட்டியதால், தலா 2 கோல்கள் அடித்தன. இதனால் ஆட்டம் பெனால்டி சூட் அவுட் நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கொலம்பிய வீரர் லூயிஸ் டியாஸ் கோல் அடிக்க, 3 - 2 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த கொலம்பியா அணி வீரர்களுக்கு,  பதக்கங்கள் வழங்கப்பட்டன.